புறநானூறு பற்றிய பொதுவான குறிப்பு
- அறிமுகம்
- கடவுள் வாழ்த்து
- பாடல்கள்
- புலவர்கள்
- அடியெல்லை
- சிறப்பு
- உரையாசிரியர்கள்
- பதிப்பாசிரியர்கள்
- முடிவுரை
- மேற்கோள்கள்
அறிமுகம்
சங்க இலக்கியத்தின் தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு. புறப்பொருள் பற்றிய பாடல்களைக் கொண்ட இந்த நூலைப் பற்றிய பொதுவான குறிப்புகளை இந்த கட்டுரையில் காணவிருக்கிறோம்.
கடவுள் வாழ்த்து
கடவுள் வாழ்த்து கொண்டே நூல்கள் தொடங்குவது வழக்கம். எட்டுத்தொகை
என்பது தொகை நூல்கள், வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு புலவர்களால்
வெவ்வேறு இடங்களில் பாடப்பட்டுள்ளது . ஆக, இதற்கான கடவுள் வாழ்த்துகள் தொகுத்தபின் எழுதப்பட்டன.
இவர் புறநானூற்றில் பொன்னார்மேனியனான ‘சிவபெருமான்’ பற்றிய கடவுள் வாழ்த்தைப் பாடியுள்ளார். இவர் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல் பின்வருமாறு ,
“கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை
ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
எல்லா உயிர்க்கும் ஏம மாகிய
பாடல்கள்
புறநானூறு என்பதைப் புறம்+ நானூறு= புறநானூறு என்று பிரிக்கலாம். புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இதில் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் அடக்கம். இதனால், புறநானூறு எனப் பெயர் பெற்றது. இதனை ‘புறம்’ எனவும், ‘புறப்பாட்டு’ எனவும், ‘புறம் நானூறு’ எனவும் கூறுவர்.
இந்த புறப்பொருளுக்கான இலக்கண நூலாக எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புறப்பொருள் வெண்பாமாலையைச் சுட்டுவர். நானூறு பாடல்களுக்கும் திணை, துறை, பாடியவர், பாடப்பட்டவர் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.
புலவர்கள்
புறநானூறு என்னும் நானூறு பாடல்களைக் கொண்ட இத்தொகை நூலினை மொத்தம் நூற்றருபது பேர் பாடியுள்ளனர்(157). இதில் ஆண்பாற் புலவர்களும்(142), பெண்பாற் புலவர்களும் (15)அடக்கம்.
இவர்கள் அரசர், கிழார், அரசவைப் புலவர் என எல்லா தரப்பினரும் அடக்கம். மேலும், இவர்கள் பழந்தமிழ் வரலாற்றை செய்யுள்கள் மூலம் ஆவண செய்து பெரும் பேறு பெற்றவர்கள் எனலாம்.
முதல் பாடலை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியுள்ளார். இறுதி பாடலை கோவூர்கிழார் பாடியுள்ளார். ஔவையார், வெள்ளிவீதியார் , ஒக்கூர மாசாத்தியார் , பாரி மகளிர் போன்ற பெண்பாற் புவலர்களும் இதில் அடக்கம்.
அடியெல்லை
கொண்டு எழுதப்பட்டது. புறநானூறும் அதே அகவற்பா என்னும் ஆசிரியப்பாவைக் கொண்டே எழுதப்பட்டது.
ஆசிரியப்பாவின் பொதுவான அடியெல்லை, மூன்று முதல் அடியெல்லை இன்றி இயற்றப்படுவது ஆகும். எனினும், ஒவ்வொரு தொகைநூலும் ஒவ்வொரு
அடியெல்லையைக் கொண்டது.
அவற்றுள், புறநானூறு நான்கு முதல் நாற்பது அடியெல்லையைக் கொண்டது
எனலாம். குறைந்தபட்சம் நான்கு அடி கொண்ட பாடல் முதல், அதிகபட்சமாக நாற்பது அடியெல்லையைக் கொண்டதாக அமைகிறது
சிறப்பு
புறநானூறு அரசர்கள், குறுநில மன்னர்கள் பற்றிய விரிவான தகவல்களைத் தருகிறது. புலவர்கள் அரசர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர். அரசனுக்கான பண்புகள், நாட்டை நிர்வகிக்கும் முறை, போர் பற்றிய ஆலோசனைகள் என அனைத்து வகைகளிலும் அரசர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
சில சிறந்த பாடலடிகளைக் காணலாம்.
1) செல்வத்துப் பயனே ஈதல் - (புறம்.189)
2) யாதும் ஊரே யாவரும் கேளிர் - (புறம்.192)
3) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே- (புறம்.18)
4) ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே- (புறம்-312)
5) அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின்- (புறம்.112)
உரையாசிரியர்கள்

1) பழையவுரை - 266 பாடல்கள்
இவ்வுரையைப் பதிப்பித்த உ.வே.சாமிநாத ஐயர், “இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் முதலியவர்களுடன் ஒப்பக்கருதும் அறிவுடையவராக” இந்த உரையாசிரியரைப் புகழ்ந்துரைக்கிறார்.
2) டாக்டர்.உ.வே.சா - 267 - 400 வரை, குறிப்புரை + சிறுவிளக்கம்
3) ஒளவை.சு.துரைசாமிப்பிள்ளை - முழு உரை
வரலாற்றுச் செய்தி, மக்கட் பெயர் மற்றும் ஊர் பெயர்கள் தெளிவான விளக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது.
பதிப்பாசிரியர்கள்
பேராசிரியர்.டாக்டர். உ.வே.சா - புறநானூறு மூலமும் உரையும் ஏட்டிலிருந்து முதலில் நூல் வடிவில் பதிப்பித்து வெளியிட்டவர் டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள். 1894-ஆம் ஆண்டில் இப்பதிப்பு வெளிவந்தது
முடிவுரை
கடவுள் வாழ்த்து தொடங்கிப் பதிப்பு பற்றிய குறிப்புகள் வரை புறநானூறு பற்றி இங்கு கண்டோம். புறநானூறு இல்லையெனில், சங்க கால வரலாறு பற்றிய பாதி பக்கங்களும் காணாமல் போயிருக்கலாம்.
மேற்கோள்கள்
1) மது.ச.விமலானந்தம் – தமிழ் இலக்கிய வரலாறு, முல்லை நிலையம், 9,
பாரதி நகர் முதல் தெரு, தி .நகர், சென்னை – 17.
2) உரையாசிரியர்கள் – மு.வை. அரவிந்தன், மணிவாசகர் பதிப்பகம்,
8/7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600108