சங்க இலக்கியங்கள் பற்றி பொதுவான தகவல்களைப் பகிரும் கட்டுரை
அறிமுகம்
சங்க இலக்கியங்கள் தமிழர் இலக்கியங்களில் முதன்மையானது. இதுவே, நமக்கு முதலில் கிடைக்கும் இலக்கிய வகை நூல்களாகும். இதனை இருபிரிவாகப் பிரிப்பர். இவை, பழந்தமிழரின் நாகரீகத்தையும், பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களை நமக்குத் தெரிவிக்கின்றன. அப்படியான சங்க இலக்கியம் குறித்த விரிவான குறிப்புகளைக் காணலாம்.
சங்க இலக்கியம் என்றால் என்ன?
சங்க இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்களுள் அடக்குவர். இவை, தமிழைச் செம்மொழியாக உயர்த்திட உதவிய இலக்கியங்களுள் ஒன்று. சங்க காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களே சங்க இலக்கியங்கள் எனப்படும். சங்க காலம் என்பது, தமிழர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலம் ஆகும். இச்சங்கங்கள் மொழி தொடர்புடைய செயல்பாடுகளை மேற்கொண்டன.
இலக்கிய, இலக்கண வளர்ச்சிகளுக்கு உதவின. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து மொழி வளர்த்த மக்கள் தமிழ் மக்கள் தான். பிரெஞ்சு கல்விக் கழகம் கூட பத்தாம் நூற்றாண்டில் தான் தோன்றியது. தமிழிலோ, இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியது.
தமிழ் வரலாற்றில் இருக்கும் அனைத்து அரசர்களும் தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியவர்களே. ஆனால், சங்கம் வைத்து
சங்கங்கள் எத்தனை இருந்தன?
சங்கங்கள் மொத்தம் மூன்று இருந்தன. அவை முறையே,
1) தலைச்சங்கம்
2) இடைச்சங்கம்
3) கடைச்சங்கம்
என்று அழைக்கப்படுகின்றன. முதலில் சங்கம்
நக்கீரர் இயற்றிய அந்த உரையில், மூன்று சங்கங்கள் பற்றிய குறிப்புகள் இருந்தன. ஆனால், வாய்வழியாக
தமிழில் சங்கமே இருந்ததில்லை என வாதிடுபவர்களும் உண்டு. ஆனால், சங்கம் இருந்ததற்கான சான்றுகளும் கிடைக்காமல் இல்லை.
1) தலைச்சங்கம்:
அகத்தியர், சிவன் முதலிய 549 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். 4449 புலவர்கள் இருந்தனர். தலைநகராக தென்மதுரை விளங்கியது. காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை எண்பத்தொன்பது (89) அரசர்கள் ஆதரித்தனர். ஏழு பாண்டியர்கள்
2) இடைச்சங்கம்:
அகத்தியர், தொல்காப்பியர், மோசி, இருந்தையூர்க் கருங்கோழியார் முதலிய 59 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். 3700 புலவர்கள் கவிபாடினர்.
3) கடைச்சங்கம்
சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், பெருங்குன்றூர் கிழார், நக்கீரர், நல்லந்துவனார் முதலிய 49 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். 449 புலவர்கள் கவிபாடினர்.
சங்க காலம் என்பது எது?
பொதுவாக சங்க காலம் கி.மு.3 முதல் கி.பி. 3 வரை கூறுவர். இவை மூன்றாம் சங்க காலத்தைக் குறிக்கும். நமக்கு மூன்றாம் சங்க நூல்களே கிடைத்துள்ளன.
தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இரண்டாம் சங்கத்தில் முடத்திருமாறன் அவையில் அரங்கேற்றப்பட்டதாகக் கூறுவர். ஆனால், கடல்கோளால் அழிந்த இரண்டாம் சங்கத்தின் பிறகு, மீண்டும் அது மூன்றாம் சங்கத்தில் நிறைவேற்றப்பட்டது.
தொல்காப்பியத்தின் காலம் கூட கி.மு.5-3 வரை இருக்கலாம் என்பர். எனவே, சங்க காலம் என்பது, கி.மு.3 முதல் கி.பி.3 வரை எனப் பல அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சங்க இலக்கிய நூல்கள் யாவை?
சங்க இலக்கிய நூல்கள் முன்பு கூறியதைப் போல் இரண்டு வகையாகப் பகுத்துள்ளனர். பதினெண் மேற்கணக்கு எனவும் கூறுவர். அவை,
1) எட்டுத்தொகை
2) பத்துப்பாட்டு
எனப்படும். மொத்தப் பாடல்கள் 2381. பாடிய புலவர் 500 பேர் ஆவர். எனினும் பெயர் அறியப்படாதவர்கள் 102 பேர். மேற்கணக்கு நூல்கள், அடியெல்லை நான்கு அடிகளுக்கு மேலே போகும், ஐங்குறுநூறு மட்டும் இதற்கு விதிவிலக்கு (3 அடி சிற்றெல்லை).
1) எட்டுத்தொகை நூல்கள்
· நற்றிணை
· குறுந்தொகை
· ஐங்குறுநூறு
· பதிற்றுப்பத்து
· பரிபாடல்
· கலித்தொகை
· அகநானூறு
இதற்கான வெண்பா பின்வருமாறு,
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு
2) பத்துப்பாட்டு நூல்கள்
· திருமுருகாற்றுப்படை
· பொருநராற்றுப்படை
· சிறுபாணாற்றுப்படை
· பெரும்பாணாற்றுப்படை
· முல்லைப்பாட்டு
· மதுரைக்காஞ்சி
· நெடுநல்வாடை
· குறிஞ்சிப் பாட்டு
· பட்டினப்பாலை
· மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)
இதற்கான வெண்பா பின்வருமாறு,
“முருகு பொருநாறு
பெருகு வள மதுரைக் காஞ்சி –
கோல
பாலை
சங்க இலக்கிய சிறப்புகள்
· சங்க இலக்கியங்கள், உலகில் பழமையான இலக்கியங்களில் நெடியது. மொத்தமாக 26,350-கும் மேற்பட்ட அடிகளைக் கொண்டது.
· பழந்தமிழரின் வரலாற்றுக் கருவூலமாக, சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன.
· புறநானூற்றை ‘ ஜி.யு.போப்’ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
· பல சங்க கால மன்னர்களின் பெயரும் வரலாறும் இதன் மூலம் நமக்குத் தெரியவருகிறது.
· பட்டினப்பாலை போன்ற நூல்களின் மூலம் சங்க கால நகரம் மற்றும் வாணிபம் பற்றி நாம் அறிகின்றோம்
· நெடுநல்வாடை மூலம் பழங்காலக் கட்டிடக்கலை பற்றித் தெரியவருகிறது.
· முல்லைக்கலி மூலம் பழந்தமிழரின் ஏறு தழுவுதல் என்னும் வீர விளையாட்டு பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
· மதுரைக்காஞ்சி மூலம் மதுரை மாநகரின் எழில் பற்றி நமக்குத் தெரியவருகிறது.
· குறிஞ்சிப்பாட்டில் 96 வகை மலர்கள், நம்மை வியக்கவைக்கின்றன.
· அரசர் முதல் கிழார் வரை அனைவரும் கவிபாடியுள்ளனர்.
· ஆசிரியப்பாவால் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.
· அகநூலோ, புறநூலோ, அறங்களைப் போதிக்கத் தவறவில்லை.
· காதலும் வீரமும் இரண்டு கண்கள்
· 30 பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர்
சங்கத் தமிழ் என்றால் என்ன?
சங்க காலத்தில் அல்லது சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட
சங்கத்தமிழ் தொல்காப்பியத்திலிருந்தும் சற்று வேறுபட்டது. கால மாற்றத்தால் மொழியில் வரும் மாற்றத்தை நமது அறிஞர்கள் மறுக்காமல் ஏற்றனர். அத்தகைய மாற்றங்களுள் சிலவற்றை இங்குக் காணலாம்.
1) மொழிமுதலில் ஞகரம், அ, எ,ஓ/அ,இ – ஓடு இணைந்து வருதல்
2) மொழிமுதலில் யகரம், ஆ/ஊ – ஓடு இணைந்து வருதல்
3) ‘ண்ம்’ /‘ய்ம்’ சொல் இறுதியில்
4) எகரம்>அகரம்
5) தன்மை பன்மை ‘எம்’ , ‘அம்’ ஆனது
6) ஊகாரம் ஆகாரமாதல்
7) மூக்கொலி மறைதல்
8) யகர ஒலி மறைவு
9) உறழ்ச்சிகள்
10) பலர்பால் விகுதியாய் பெயரில் ‘மார்’ விகுதி பயன்பாடு
11) வினா இடப்பெயர்களாய் ‘யாங்ஙனம்’, ‘யாண்டு’ வருதல்
12) அகரம் ஆறாம் வேற்றுமையானது
13) ‘இல்’, ‘இன்’ என்னும் இடப்பெயர்கள் வேற்றுமை உருபானது
14) நான்கு, ‘நால்கு’ எனப் பயன்பாடு
15) எண்ணுப்பெயரில் ‘அன்’ சாரியை இன்றி வருதல்
முடிவுரை
இவ்வாறாகச் சங்க இலக்கியம் பற்றியும், அது ஏன் சங்க இலக்கியம் என்பதைப் பற்றியும், சங்க காலம் பற்றியும், அப்போது எழுந்த சங்க நூல்களும் அதன் சிறப்புகளும் இறுதியாக சங்கத்தமிழ் கூறுகள் பற்றியும் இக்கட்டுரையில் விரிவாகக் கண்டோம். இன்றும் இதன் அடிகளும், பதங்களும் நடைமுறையில் இன்றளவும் பயன்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.