ஓவியக் கலைஞர் தனது ஓவியங்களை பற்றி எடுத்துரைக்கும் கவிதை
எனது உலக சாலேகம் இது !
எனது கற்பனை எச்சம் இது !
பிம்பம் தோன்றா கண்ணாடி இது !
இன்பம் தோன்றும் எனதிடம் இது !
வாழ்வில் தேநீர் இடைவெளி இது!
தாழ்வு மேடில்லா சமவெளி இது !
என் காலத்தோன்றல் பாதை இது !
மண்விலக்கு பதவி கொடுக்கும் இது !
சந்திர சூரிய சங்கமம் இது !
தந்திரம் தெரிந்தவனுக்கே தந்திடும் இது !
எனக்கு தூங்கா வரம் தந்திடும் இது !
என்னிடம் மங்காவரம் பெற்றிடும் இது !
பலநிற உதிரம் கொடுத்தது இது !
எலும்பைத் தூரிகையாய் சமைத்தது இது !
ஓவியம் என்று பிறப்பெடுக்கும் இது !
புவி வான் பொழியாத பெருமழை இது !
கண்காணும் வண்ணங்கள் கலவை இது !
என்எண்ணக் குமுறலின் சிதறல் இது !