தமயந்தி கவிதை
தாமரைத் தடாக
இலைகள் இடைமறித்து ,
எங்கே போகிறாய்
என்று கேட்டும்,
இரகசியம் என உங்கள் இருவர்
தூதின் கண்ணியம்
காத்த அன்னத்தை,
வந்தனங்கள் பல சொல்லி
நீ கேட்பது என்னடீ !
தமயந்தி ,
நள மகாராஜனின்
நல விசாரிப்பா?
எங்களுக்குத் தெரியாத
இரகசியம், இங்கு
என்னவிருக்கிறது என
லாவண்யங்கள் கொஞ்சும்
தாமரை இதழ்கள்,
நாணத்தால் சிவந்து
அந்தச் சாயத்தைத்
தடாகத்திலும் கரைக்க,
இந்நிகழ்வை யாதொன்றும்
அறியாமல், இன்னும்
அங்கயற்கண் இமைக்காமல் நீ
அன்னத்தை
கேட்பதென்னடீ! தமயந்தி,
நள மகாராஜனின்
செம்மேனி சாயமா?
உங்களின் உரையாடல்
வைத்து காற்றிலேயே
குயில்கள் காவியம் பாடி
முடிந்துவிட்டன,
உங்களின் இரகசியம்
கசிந்து தமிழ் ராணியின்
கட்டளை பேரில்
உனது புகழேந்த, வெண்பா
முத்துக்களைப் புகழேந்தி புலவன்
சிதறவிட்டும் முடித்துவிட்டான்!
இத்துணையும் அறியாமல்
இன்னும் நீ அன்னத்தை
அவஸ்தை படுத்துவது ஏனடீ!
தமயந்தி,
நள மகாராஜன்
நங்கைக்குக் கொடுத்துவிட்ட
ஓலையை அன்னம் தொலைத்து
விட்டதாலா?
தாமரைத் தடாக
இலைகள் இடைமறித்து ,
எங்கே போகிறாய்
என்று கேட்டும்
இரகசியம் என உங்கள் இருவர்
தூதின் கண்ணியம்
காத்த அன்னத்தை
வந்தனங்கள் பல சொல்லி
நீ கேட்பது என்னடீ !
தமயந்தி ,
நள மகாராஜனின்
நல விசாரிப்பா?
எங்களுக்குத் தெரியாத
இரகசியம் ,இங்கு
என்னவிருக்கிறது என
லாவண்யங்கள் கொஞ்சும்
தாமரை இதழ்கள் ,
நாணத்தால் சிவந்து
அந்தச் சாயத்தைத்
தடாகத்திலும் கரைக்க,
இந்நிகழ்வை யாதொன்றும்
அறியாமல் ,இன்னும்
அங்கயற்கண் இமைக்காமல் நீ
அன்னத்தை
கேட்பதென்னடீ ! தமயந்தி ,
நள மகாராஜனின்
செம்மேனி சாயமா?
உங்களின் உரையாடல்
வைத்து காற்றிலேயே
குயில்கள் காவியம் பாடி
முடிந்துவிட்டன,
உங்களின் இரகசியம்
கசிந்து தமிழ் ராணியின்
கட்டளை பேரில்
உனது புகழேந்த, வெண்பா
முத்துக்களைப் புகழேந்தி புலவன்
சிதறவிட்டும் முடித்துவிட்டான் !
இத்துணையும் அறியாமல்
இன்னும் நீ அன்னத்தை
அவஸ்தை படுத்துவது ஏனடீ !
தமயந்நி ,
நள மகாராஜன்
நங்கைக்குக் கொடுத்துவிட்ட
ஓலையை அன்னம் தொலைத்து
விட்டதாலா?