இலக்கிய வளர்ச்சி குறித்த தமிழ் இலக்கியப் பார்வையுடன் ஒரு கட்டுரை
1. அறிமுகம்
2. பொதுவான வளர்ச்சி
3. எது மொழி வளர்ச்சி?
4. இலக்கிய வளர்ச்சிக்கான கொள்கைகள்
5. மொழி வளர்ச்சி வகைகள்
7. மரபு முதல் மரபு மீறல் வரை
அறிமுகம்
இலக்கியம் ஒவ்வொரு மொழிகளுக்கும் பண்பட்ட நிலைக்கு உதாரணமாக இருக்கிறது. இலக்கியம் தான் இலக்கணத்தின் தோற்றுவாய். இலக்கிய வளம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு இலக்கணங்கள் தோன்றி மொழியைப் பண்படுத்தும். இலக்கியங்கள் வளர்ச்சி தான் மொழி வளர்ச்சி. அப்படியான இலக்கிய வளர்ச்சி பற்றி தமிழ் இலக்கியப் பார்வை கொண்டுள்ளது இக்கட்டுரை.
பொதுவான வளர்ச்சி
வளர்ச்சி என்பது முன்பு இருந்த நிலையில் இருந்து சற்று மேம்பட்ட நிலை. மண்ணில் விதை போட்டால் அது வளர வேண்டும். விதை நிலையிலிருந்து செடி என்னும் நிலைக்கு மாற வேண்டும். இல்லையேல் உழைப்பு வீண். உழைப்பு வீணாகும் விஷயத்தில் போகப் போகக் கவனம் குறையும். ஒரு கட்டத்தில் அது அழிந்தும் போகும்.
எனவே, வளர்ச்சி இல்லாத ஒன்று அழிவிற்காகக் காத்திருக்கிறது என்பது தான் உண்மை.
எது மொழி வளர்ச்சி?
மொழி,
மனிதனோ அப்படி இல்லை. ஆரம்பத்தில் பேச்சே அறியாதவன் இன்று கவிதை எழுதுகிறான். காவியம் படைக்கிறான். மொழிகளில் பல விளையாட்டுகளைக் கண்டுபிடித்து விளையாடுகிறான். இந்த நிலை தான் மனிதன் ஆறறிவு உடையவன் என்பதைத் தீர்மானிப்பதாகக் கூறுவர்.
உலகில் இலட்சக் கணக்கான மொழிகள் இருப்பினும், அதில் சில வகைகள், இன்றும் இலக்கிய, இலக்கண வளங்களைக் கொண்டு செம்மொழி அந்தஸ்துடனும் இருக்கிறது. இன்னும் சில மொழிகள் அழிந்தும் வருகின்றன. மொழி வளர்ச்சியடைவதற்கான சில சூழ்நிலைகள் இல்லாவிட்டால் அவைகளை அழிவிலிருந்து மீட்பது கடினம். அவை பின்வருமாறு,
· மொழியைப் பேசும் தேவை இருத்தல்
· சம்பந்தப்பட்ட மொழி காலத்திற்கு ஏற்ப மாறும் தன்மை பெற்றிருப்பது
· தனக்கான இலக்கணத்தைத் தானே மீறி புதிய இலக்கணத்தை உருவாக்கும் தன்மை பெற்றிருத்தல்
· அறிவியல் கல்வி கொடுக்கும் மொழியாக இருப்பது
· தம் மேம்பாட்டுக் கொள்கை கொண்ட மொழியாக இருப்பது
இலக்கிய வளர்ச்சிக்கான சூழ்நிலைகள்
ஒரு மொழியில் இலக்கியங்கள் வளர்ச்சி
Ø மொழியானது ஒரு குறிப்பிட்ட
Ø இலக்கியத்தை, இலக்கிய வடிவுடன் எழுத ஏதுவான இலக்கணச் சூழலைக் கொண்டிருத்தல்
Ø அடிப்படை இலக்கணச்சிதைவைத் தவிர்த்தல்
Ø புதிய இலக்கிய வடிவங்களில் கவனம் செலுத்துவது
Ø அரசியல் சூழல்களுக்கு ஏற்ப மாறும் தன்மை
Ø அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றபடி இருக்க வேண்டும்
முதலிய பலவாறான நிலைகள் இலக்கிய வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன.
மொழி வளர்ச்சி வகைகள்
மொழிகள் தான் மனித ஆறறிவிற்கு ஆதாரம் என்பதை முன்னர் கண்டோம். பொதுவாகவே மொழியியல் அறிஞர்கள் மொழி கடந்து வந்த பாதையை ஆராயும் பொழுது, நாட்டுப்புற வடிவங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பர்.
நாட்டார் கதைகள், நாட்டார் பழமொழிகள், நாட்டுப்புற இசை, நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் என அனைத்திலும் நாகரிகச் சாயம் சற்றுக் குறைவாகவே இருக்கும்.
நாட்டுப்புறங்களில் மக்கள் சற்றுப் பின்தங்கி இருக்கும்போது, அவர்களின் மொழிகளிலும், நாட்டார் இலக்கியங்களிலும் மொழிப் புதுமையும் அரிதானதாகவே இருப்பதைக் காணலாம். எனவே, அவைகள் பழங்கால வடிவங்களை
இதனால், மொழி வளர்ச்சி என்பது மனிதனின் நாகரிகத்தோடும், பண்பாடோடும் தொடர்பில் இருக்கிறது என்பது தெளிவு. தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை மொழி வளர்ச்சியும் அப்படியானதாகத்தான் இருந்துள்ளது.
அந்நியர் தலையீடு, சமயபபூசல்கள், அரசியல் மாற்றங்கள் என அனைத்தும் மொழிகளில் பிரதிபலித்துள்ளது. அதுவே, இலக்கிய வளர்ச்சிக்கும் போதுமானதாக இருந்துள்ளது.
வடிவமைப்பில் வளர்ச்சி
தமிழில் இலக்கிய வடிவங்களிற்குப் பஞ்சமில்லை. முன்னோர் இலக்கியங்களிற்கெல்லாம் மூத்த இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே வடிவ இலக்கணங்கள் செய்யுளியல் மூலமாகக் கூறப்பட்டிருக்கிறது.
ஒரு பொருளின் அடிப்படைக் கூறு அணு என்பதைப் போல் செய்யுள் தொடுக்கும் மொழியின் அடிப்படைக் கூறு எழுத்து. அது முதல் அசை, சீர், தளை, அடி, தொடை, பாவகை, பாவினங்கள், வனப்பு என வடிவங்களை விளக்கியுள்ளது தொல்காப்பியம்.
சங்க இலக்கியங்களில் எளிய பாவான ஆசிரியப்பா பயன்பட்டிருக்கும். பின்பு மருவிய காலத்தில், மக்கள் தன்னிலை தடுமாற அவர்களிடம் அறிவுரை கூற வெண்பாவின் செப்பும் தொனி பயன்பட்டது.
காப்பியங்கள் யாவும் தொடர் நிலைச் செய்யுள்களாகவும், விருத்தப்பாவிலும் இயற்றப்பட்டன. இது பிற்காலத்தில் தோன்றிய பாவகையாகும். அதன்பிறகு சிற்றிலக்கிய
சிற்றிலக்கியங்கள் தோன்றியபோது அவைகளில் எல்லா வடிவங்களுக்கும் இலக்கணம் இயற்றி அதனைப் பின்பற்றியே பாடல்கள் இயற்றப்பட்டன. தலைவன், தலைவிகளின் பெயரை மாற்றிக்கொள்ளலாமே தவிர இலக்கிய வடிவம் காப்பியம் மற்றும் மற்ற நீதி இலக்கியங்கள் போலல்லாமல் வரையறுக்கப்பட்ட வடிவம் பெற்றிருந்தன.
இப்படியே காலவெள்ளத்தில் நம்முடைய இலக்கியங்கள் வடிவங்களில் வளர்ச்சி அடைந்தன. செய்யுளை எப்படி இயற்றவேண்டும் என்ற நகலைத் தொடங்கி, இன்ன இலக்கியத்தில் இந்த பாவகை இத்தனை வரவேண்டும் என வரையறுக்கும் வரை சென்றுள்ளது. வெறும் ஆசிரியப்பாவிலேயே நின்றிருந்தால் இதனை மொழி வளர்ச்சி எனவோ, இலக்கிய வளர்ச்சி எனவோ கூறியிருக்க முடியாது.
நோக்கத்தில் வளர்ச்சி
எந்தவொரு இலக்கியத்தை இயற்றும் போது நோக்கம் அவசியம். அதுவும் அது ஆக்கப்பூர்வமான நோக்கமாக இருக்க வேண்டும். அது சமுதாயத்தில் நன்மை பயக்கும் நோக்கம் கண்டிருக்க வேண்டும். அதைத் தலைமுறைகள் கடந்தும் பின்பற்றும் உலக உணமைகளைக் கூற வேண்டும்.
சங்க இலக்கியங்களில் எளிமையான பாவகை எளிய மக்களும் அணுகும் படியாக இருந்தது. எந்தவொரு பிரச்சனைகளும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வந்த சங்க மக்களுக்கு அகவலோசை ஒருவகை இன்பம் தந்தது.
இருண்ட காலத்திலோ, சங்க காலம் என்னும் பொற்காலம் போலல்லாமல் அரசியல் குழப்பங்கள், பூசல்கள் என மக்கள் திசைமாறினர். அவர்களுக்கு அப்போது இனிமை என்பது அவசியப்படவில்லை. அவர்களை நெறிப்படுத்தச் சான்றோர்கள் முயன்றனர். அறங்களை போதிக்க அவர்களுக்கு அகவலோ, துள்ளலோ, தூங்கலோ தேவைப்படவில்லை.
அருகே அமர்ந்து கற்பிக்கும்
பின்பு காப்பியங்கள் போன்ற தொடர் நிலையாகச் செய்யுள் மூலம் கதைகள் சொல்லப்பட்டன. சிறு சிறு இலக்கியங்களைப் படித்துவந்த மக்களுக்கு இந்த மாற்றம் புதுமையைத் தந்தது. இதைப் பயன்படுத்தி அக்காலச் சமணமும், பௌத்தமும் தங்களின் சமயக்கொள்கைகளைப் பரப்பினர். கிபி இரண்டாம் நூற்றாண்டு முதல் இவை அரங்கேறினர்.
இதில் எதுவும் இல்லாத விருத்தப்பாக்கள் தோன்றலாயின. அந்த வடிவ மாற்றம் இலக்கியத்திலும் பிரதிபலித்தது. சீவகசிந்தாமணி இதனால் இயற்றப்பட்டது. அழகியலோடு சமயம் சேர்ந்து வெற்றி கண்டது.
பக்தி
ஒரு தலம் பற்றிய குறைந்தது பத்து விருத்தங்களைக் கொண்டது சைவத்தில் பதிகம், வைணவத்தில் பாசுரம். இந்தப் பதிகத்திற்குப் பிற்காலத்தில் இலக்கணங்களும் இயற்றப்பட்டன.
இதுபோல இடைக்காலப் புலவர்கள் பக்தி நோக்குடன் பல இலக்கிய வடிவங்களுக்கு உயிர் கொடுத்தனர். அதற்குப் பிற்காலத்தில் வடிவம் என்னும் உடல் கொடுத்தனர். பிறகு மேலை நாட்டு இலக்கியத் தாக்கத்தாலும் மொழியைக் காக்கும் கட்டாயத்தாலும், தமிழ் மேலைநாட்டுப் உரைநடைகளை தனதாக்கிக் கொண்டது. எல்லா காலங்களிலும் வந்த மாற்றங்களையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட மொழியாகத் தமிழ் விளங்கியதாலேயே அதன் இலக்கிய வளர்ச்சிக்கு எவ்வித இடையூறும் வராமல் இருந்துள்ளது.
முயற்சி எளிமை
மொழிகள் இதுவரை எழுத்து, உச்சரிப்பு மூலமாகவும் பிற காரணங்கள் மூலமாகவும் முயற்சி எளிமையாலேயே பல மாற்றங்களை அடைந்துள்ளது. இதனால் பல தமிழ் எழுத்துகள் இலக்கியங்களில் கூட இடம்பெறாமல் போனதும் உண்டு.
எனினும் முயற்சி எளிமையும் இலக்கிய வளர்ச்சிக்கு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அடியெல்லை இல்லாத ஆசிரியப்பாவை விட அறிவுரைச் சொல்ல நான்கடி வெண்பாக்கள் எளிதாக இருந்திருக்கலாம். செவியறிவுறுஉ என்னும் துறைகளில் ஆசிரியப்பாவும் அறிவுரை கூறிய பாவகை தான் என்பதும் மறுக்க இயலாது.
பெரிய பெரிய செய்யுள்களை தலந்தோறும் பாடி இயலாததால் சிறு பதிகங்களை நாம் முயற்சி எளிமையாகப் பார்க்கலாம். எந்த வடிவத்தில் பாடலாம் எனக் குழம்பித் தவிக்கும் புலவர்களுக்கு, யாரை வேண்டுமானாலும் பாடுங்கள் ஆனால் இப்படிப் பாடுங்கள் எனக்கூறுகின்றன பாட்டியல் நூல்கள். இதுவும் ஓர் எளிமைக்கான தேடல் தான்.
இன்று ஊடகத்திலும் ஊடுருவி இருக்கும் தமிழ் மிகவும் எளிய வடிவம் பெற்றுள்ளது. எளிய மக்களுக்கும் சென்றடையும் விதமாக இங்கும் சில வடிவ மாற்றங்களும், பிற மொழிச் சொற்களும் கையாளப்படுகின்றன. அவைகள் பெரும்பாலும் நடைமுறையில் உள்ள வார்த்தைகளாகத் தான் இருக்கும். இதுவும் முயற்சி எளிமையாகக் கொள்ளலாம்.
தமிழ் இலக்கியம் வளமானது எப்படி?
தமிழ் ஒரு விருந்தோம்பும் மொழி. செல் விருந்தோம்பி வருவிருந்துக்காக காத்திருக்கும் மொழி. தமிழிற்கு எதுவும் அந்நியம் கிடையாது. எல்லா வடிவங்களுக்கும் அது இடம் கொடுத்துள்ளது. எல்லா மாற்றங்களுக்கும் அது இடங்கொடுத்துள்ளது.
சமணர்கள் கொண்டு வந்த மணிப்பிரவாள நடை முதல் மரபுக் கவிதையின் ஆதிக்கத்தை உடைத்தெறிந்த புதுக்கவிதை வரை தமிழ் எல்லா மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டு அதில் தனக்கான இலக்கியங்களை வடித்துக் கொண்டதன் விளைவு, அதன் வளம் இருக்க இருக்கப் பெருகியதேத் தவிரத் தடுமாறியும் குறையவில்லை.
எந்த ஒருமொழி அடிப்படை இலக்கணத்திலிருந்து மாறாமல், காலத்திற்கு ஏற்ப இலக்கிய வடிவத்திற்கு மாற்றம் தந்து அதன் மூலம் பிறக்கும் புதிய கொள்கைகளை இலக்கணமாக மாற்றும் ஒருவகை சங்கிலித் தொடரைக் கொண்டுள்ளதோ அதுவே வளரும் மொழியாக இருக்க முடியும்.
அதன் படி நன்னூலாரும் காலத்திற்கு ஏற்ப, மொழி மாற்றத்திற்கு ஏற்ப பழைய இலக்கண விதிகளை விட்டு புதிய இலக்கண விதிகளை ஏற்றுக் கொள்வது தவறில்லை எனக் கூறியதன் விளைவே தமிழின் வளர்ச்சிக்குக் காரணம் என்றால் மிகையல்ல.
“பழையனக் கழிதலும் புதியனப் புகுதலும்
வழுவல கால வகையி னானே” -(நன். சொல்:462)
என்கிறார்.
“இறந்தது விலக்கல் எதிரது போற்றல்” -(நன்:7)
என்று மொழியின் நிதர்சனத் தன்மையைக் கூறுகிறார். இப்படி மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக் கற்பித்ததே இலக்கிய வளத்திற்குக் காரணமாகப் பார்க்கப் படுகிறது.
மரபு முதல் மரபு மீறல் வரை
மொழி வளர்ச்சியில் கூறப்பட்ட விதிகளில் தனக்கான இலக்கணத்தைத் தானே மீறும் தன்மையைக் குறிப்பிட்டிருப்போம். உண்மையில் இது வேடிக்கையாக இருந்தாலும் இது போன்ற பல மீறல்கள் தமிழில் நடந்துள்ளது.
தொல்காப்பிய இலக்கணத்திலேயே இல்லாத பாவகைகள் பல நூற்றாண்டுகள் தமிழில் இடைக்காலப் புலவர்களால் ஆட்சி செய்து வந்தது. பாவகைகளை மட்டும் கூறியது இலக்கணம். ஆனால் அப்பாவகைகளைப் பலவாறு கோர்த்து மணிமாலைகளை அமைத்துக்கொண்டது தமிழ்.
இலக்கண நெறிமுறைகளைப் பின்பற்றியே பாடல்களை இயற்ற வேண்டுமென விதிகளை உடைத்தெரிந்தோம். இன்று யாப்பிலக்கணம் கற்காதவரும் நற்றமிழ் கவிதைகளையும் தத்துவங்களையும் புதுக்கவிதைமூலம் புதிய கண்ணோட்டத்தில் பாடுகின்றனர்.
இறைவனின் பாடல்களுக்கு உரைகள் எழுதக் கூடாது என்ற விதிகளை மீறியதால் தான் இன்றும் அவை ஆலயங்களில் ஒலிக்கிறது.
“ அணைகளை உடையுங்கள் ஆறுகள் பாடட்டும்” -(ஒ.கி.ந.பா.7)
என்ற சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதை வரி மீறல்களை வலியுறுத்துகிறது. தமிழின் கோட்டை எல்லைகள் யாவும் புதிய கோட்டைகளில் வாயில்களாகத்தான் இருந்துள்ளன. மண்ணை மீறினால்தான் விதை மரமாகும் என்றால் மீறுவதில் என்ன தயக்கம்?
முடிவுரை
இதனால், மொழியின் வளர்ச்சியே இலக்கிய வளர்ச்சிக்குத் திறவுகோல் என்பதை உணர்ந்து மொழி வளர்ச்சியில் கவனம் செலுத்தினாலே இலக்கியமும் தானாக வளரும். இக்கால அறிவியல் மாற்றங்கள், தொழில்நுட்பத் தாக்கங்கள் யாவும் நாமும் நமது மொழிக்கேற்றபடி அமைத்துக் கொண்டால் இன்னும் பல நூற்றாண்டுகள் அது உயிர்ப்புடன் இருக்கும். மேலும், புதிய இலக்கிய இயக்கங்களும், இக்காலத்திற்கு ஏற்ற இலக்கண விதிகளையும் எழுதும் நேரமும் தொலைவில் இல்லை என்பதையும் உணர வேண்டும்.
மேற்கோள்கள்
1) நன்னூல் – சோம. இளவரசு - மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600108.
2) ஒரு கிராமத்து நதி – சிற்பி பாலசுப்பிரமணியம், கோலம் வெளியீடு, பொள்ளாச்சி, முதல்பதிப்பு, டிசம்பர் 1998