ஆடம்பரம் நிறைந்த வீட்டில் அமர்ந்து தியானிக்கும் புத்தர் சிலையைப் பார்த்து கேள்வி கேட்கும் கவிதை
இந்த வீட்டின் நுழைவாயிலின் சாயல்தான்!
பளிங்கு தரை!
கண்களில் பளபளக்கும்
கண்ணாடி சாளரங்கள்!
கதவில் கண்சிமிட்டிடும்
மரச்சிற்ப வேலைப்பாடுகள்!
அமரும் நாற்காலிகள்
அமரத்தலைவனாய் உணரவைக்கும்!
கண்கள் வீட்டை அலசி பார்க்க
எண்பதுமணி
ஆறடி கண்ணாடி பேழையில்
அலைகளைத் தேடிடும் வண்ண மீன்கள்!
சந்தோசப் பேச்சுக்கள் அவ்விடத்தில்
செத்து
தங்கத் தட்டுகளில்
தவழ்ந்திடும்
வெள்ளி கோப்பையில்
விளையாடும்
வாங்குபவன் வந்தால்
வந்தவழி விரட்டுவர்!
கொடுப்பவன் வந்தால்
கொண்டாடி மகிழ்வர்!
நேற்று வாங்கி வைத்த
கூண்டுக்கிளிகள் கீச்சொலிகள்,
உனக்கு
என அறை எங்கும்
எதிரொலித்து அமைதியானது!
அதைக் கேட்டும்
சன்னலோர மேசையில்
சுவரோரம் பாருங்கள்!
மௌனமாய் சிலையாய்
தியானிக்கிறான் புத்தன்!
COMMENTS