ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை பற்றிய விரிவான அலசல்
தலைப்பு :
தலைப்பு என்பது நீங்கள் எழுதும் முழுக்கட்டுரையின் முகப்பாக இருக்கவேண்டும். கட்டுரையின் கருத்தோட்டத்திற்கேற்ப அமைய வேண்டும். எவ்வகை ஆய்வு என்பதையும் குறிப்பிடலாம். முடிந்தவரை பத்து வார்த்தைகள் முதல் பதினைந்திற்குள் இதனை அமைக்கலாம்.
உங்கள் முகவரி :
உங்கள் பெயர், பணி/ படிப்பு, வேலை/ படிக்கும் நிறுவன முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் உங்கள் மின்னஞ்சலைக் கொடுக்கலாம்.
ஆய்வுச் சுருக்கம் :
இதை ‘ABSTRACT ‘ எனவும் கூறுவர். இது பெரும்பாலும் ஆங்கிலம், தமிழ் அல்லது இரண்டிலும் என ஆய்வு இதழிகளின் தேவைக்கு ஏற்ப அமையவேண்டும். உங்கள் கட்டுரையின் மொத்த கருத்துகளை 150 முதல் 250 வார்த்தைகளுள் அடங்குமாறு அமைக்கவேண்டும்.
ஆய்வில் நீங்கள் எடுத்துக் கொண்ட கருத்து, அந்த கருத்தை நிலைநிறுத்த நீங்கள் கையாண்ட உத்திகள், அதற்கு உதவியவை போன்றவற்றையும் அதன் முடிவையும் கூறலாம். ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள் காட்டத் தேடுபவர், பல கட்டுரைகளில் இந்தப் பகுதியையே படிப்பர்.
அவர்களுக்குத் தேவையான விடயம் இக்கட்டுரையில் இருக்கிறதா, இல்லையா என்பதை இந்த ஆய்வுச்சுருக்கம் சொல்லிவிடும். இது கட்டுரை முழுவதையும் படிக்கும் நேரத்தைக் குறைக்கும்.
முக்கிய வார்த்தைகள். :
ஆய்வுக் கட்டுரையின் முக்கியமான, சொற்கள் இங்குக்கொடுக்க வேண்டும். ஆய்விதழில் உங்கள் கட்டுரை பிரசுரமானவுடன், இந்த வார்த்தைகள் உங்கள் கட்டுரையினை முன்பக்கத்தில் காட்ட உதவும். நான்கு வார்த்தைகளைக் குறிப்பிடலாம்.
முன்னுரை.:
வழக்கம் போல் இது கட்டுரைக்கு முகப்பு கட்டுரையின் நோக்கத்தைக் கூற வேண்டும். எதற்காக இந்த கட்டுரை, இந்த கட்டுரையின் இன்றியமையாமை, இந்தகட்டுரையில் கூறும் கருத்து பற்றிய முன்னோட்டத்தைக் கொடுக்க வேண்டும்.
துணைத் தலைப்புகள்:
முன்னுரைக்குப் பின், முடிவுரைக்கு முன் இருக்கும் அனைத்து தலைப்புகளையும், ஆங்கிலத்தில் ‘Body of the Essay’ என்று அழைப்பார்கள். முன்னுரையும் முடிவுரையும் தலை, பாதம் என்றால் இந்த தலைப்புகள் தான் உடல்போன்றது.
நீங்கள் எடுத்திருக்கும் கருத்துக்களை இங்கு தலைப்புகளிட்டு எழுதலாம். ஏறத்தாழ 5- 8 தலைப்புகள் இடலாம். தேவைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கையைக் கூட்டலாம், குறைக்கலாம்.
படங்களைத் தேவையான இடங்களில் கொடுத்து, அதற்கு எண் முறையில் அதாவது 1.1 , 1.2 போன்று பெயரிட்டால், அந்த படத்தை எண் மூலமாகக் குறிப்பிட்டு எழுதவும், படிக்கவும் ஏதுவாக இருக்கும்.
மேற்கோள்கள் காட்டினால் (-) இந்தக் குறியிட்டு அது எந்த நூலில் எந்த பாடல் அல்லது எந்த பக்கம் என்பதைக் குறிக்கலாம். பெரிய பெயராக இருந்தால் சுருக்கக் குறியீட்டைப்பயன்படுத்தலாம்.
உதாரணம் (1): (தொல். எழு.22) என்றால் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் 22வது நூற்பா.
உதாரணம். (2): ( த.வ.ம.ப.234). என்றால் தமிழக வரலாறும் மக்கள் பண்பாடும் என்ற நூலில் 234வது பக்கம்.
முடிவுரை :
உங்கள் கட்டுரையில் நீங்கள் ஆராய்ச்சி செய்த, விவாதித்த, எடுத்துரைத்த கருத்தின் முடிவை இங்குக் கூறலாம். உங்கள் கருத்தை நிலைநிறுத்தும் இடம் இது. முடிவோடு விடாமல் இதில் இருக்கும் குறைகளையோ, அல்லது உங்கள் கேள்விகளையோ சுட்டிக்காட்டி அதை வேறு ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சி செய்ய ஊக்குவிக்க வேண்டும். உங்கள் முடிவுரை வேறு ஒருவரின் முன்னுரையாக இருப்பது நல்லது. மாற்றங்களுக்கான யோசனைகளையும் நீங்கள் இங்குப் பரிந்துரைக்கலாம்.
மேற்கோள்கள் :
மேற்கோள்கள் தொடர்பான நூல்களின் பட்டியலை இங்குகொடுக்கலாம். குறைந்தது பத்து மேற்கோள் நூல்களை நீங்கள் உங்கள் கட்டுரையில் பயன்படுத்த வேண்டும். அது உங்கள் கட்டுரையின் தரத்தை உயர்த்த உதவும்.
1) நூலாசிரியர் பெயர் ( ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களானாலும் பெயர்
கொடுக்கவேண்டும்).
2) நூலின் பெயர்
3) பதிப்பக முகவரி
4) பதிப்பின் ஆண்டு. ( மாதம் இருந்தால் குறிப்பிடலாம்)
இந்த வரிசையில் நீங்கள் மேற்கோள் நூல்களை பட்டியலிடவேண்டும்.
உதாரணம்: கவிஞர் பத்மதேவன். ( உ .ஆ ) – நாலடியார் மூலமும் உமையும் , கற்பகம் புத்தகாலைம் , சென்னை – டிசம்பர் 2017
மேற்கோள்கள் இனையத்திலிருந்து எடுக்கப்பட்டால்,
1) ஆசிரியர் பெயர்
2) வலைப்பதிவு வெளியீட்டு ஆண்டு பற்றிய விபரங்கள்
3) வலைப்பதிவின் தலைப்பு
4) வலைப்பதிவின் உரலி(Link)
உதாரணம்: எழுத்தாளர் ஜெயமேகன் உரை., நவம்பர் 2019, அறமெனப்படுவது யாதெனின்..https://www.jeyamohan.in/26673/
கவனிக்க வேண்டியவை:
1. எழுத்துப்பிழை, சந்திப்பிழை, வாக்கியப் பிழை இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
2. காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற் புள்ளி, முற்றுப் புள்ளி, அடைப்புக் குறிகளில் கவனம் தேவை
3. தலைப்பு இட்டவுடன் மேற்கோள்கள் காட்டக் கூடாது. ஒரு பத்தி எழுதியவுடன்
மேற்கோள்களைக் காட்டலாம்.
4. ஆய்விதழ் குறிப்பிட்ட எழுத்துரு(Font), வரிகளின் இடைவெளிகள்(Line Spacing),
வார்த்தை எண்ணிக்கை(Word Count) முதலியவற்றை சரிபார்த்து தட்டச்சு செய்யவும்.
ஏன் ஆய்வுக்கட்டுரை:
இது உயர்கல்வி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர் தங்கள் குறுஆய்வை சமர்ப்பிக்க எண்ணி எழுதுவது ஆகும். ஆசிரியர்களின் பணி உயர்வுக்கும் இது பயன்படுகிறது.
முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களும், ஆராய்ச்சிப் படிப்பு முடிவதற்குள் மூன்று ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.
எந்த இதழ் சிறந்தது: சாதாரணமாக மூன்று வகை இதழிகளில் தங்கள் ஆய்வை வெளியிட வேண்டும்.
1) UGC Care listed Journal
2) Scopus indexed Journal
3) Web of Science indexed Journal
நீங்கள் எழுதப் போகும் ஆய்விதழ் இந்த மூன்றின் ஆங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவை செயல்பாட்டில் இருக்கும் ஆய்விதழாகவும் இருக்க வேண்டும். இந்த வகை ஆய்வுகள் தான், உங்கள் ஆராய்ச்சி வரலாற்றுக் கணக்கில் சேரும்.
தமிழைப் பொறுத்தவரை முதல் வகை மட்டுமே உண்டு. ஆதாவது UGC Care listed Journal அங்கீகாரம் பெற்ற ஆய்விதழாகத் தான் உள்ளது. மற்ற இரண்டின் அங்கீகாரம் பெறவில்லை.
நீங்கள் சம்பந்தப்பட்ட ஆய்விதழின் வலைப்பதிவு பக்கத்தில் அது அங்கீகாரம் பெற்ற இதழா, பெறாததா என சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.
இதுவன்றி மற்ற இதழிகளிலும் தாராளமாக உங்கள் ஆய்வுக்கட்டுரை நீங்கள் வெளியிடலாம்.
உணர்த்தும்
அறங்கள்
மாதிரி வார்ப்புரு :